பெரம்பூர்: ஓட்டேரி பகுதியில் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் வாங்கி அதனை வீடுகளுக்கு இட்லி மாவு அரைப்பதற்கு பயன்படுத்துவதாக ஓட்டேரி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ஓட்டேரி கொசப்பேட்டை திருவிக தெரு பகுதியில் ஓட்டேரி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இட்லி மாவு அரைக்கும் ஒரு கடையில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 322 கிலோ ரேஷன் அரிசி, 3 கிரைண்டர்கள் மற்றும் 500 கிலோ இட்லி மாவு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஓட்டேரி கொசப்பேட்டை திருவிக தெரு பகுதியைச் சேர்ந்த உஷா (45) என்பவரை கைது செய்தனர். அவரை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இட்லி மாவு கடையில் 322 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.