'இட்லி கடை' புதிய போஸ்டர்களை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்

2 weeks ago 5

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். 'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் 'இட்லி கடை' புதிய போஸ்டர்களை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த புதிய போஸ்டரை தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Happy pongal ❤️❤️ pic.twitter.com/MhfYIwCBE0

— Dhanush (@dhanushkraja) January 13, 2025
Read Entire Article