'இட்லி கடை' படத்தின் அப்டேட் கொடுத்த அருண் விஜய்

1 month ago 5

சென்னை,

நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி, ராயன்', 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்போது இயக்கி இருக்கும் படம் 'இட்லி கடை'.

இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நித்யாமேனன் , அருண்விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேட்டி ஒன்றில், "நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் ஆகிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையவில்லை. இன்னும் 10 சதவீத படப்பிடிப்புகள் மீதம் உள்ளது. நல்ல படத்தை அவசர அவசரமாக வெளியிட வேண்டாம் என நினைக்கிறோம். எனவே விரைவில் இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்றை அருண் விஜய் பகிர்ந்துள்ளார். அதன்படி, போஸ்டர் ஒன்றை பகிர்ந்து, 'பெரிய படமாக இது இருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article