
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகை நித்யா மேனன். இவர் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் தனுஷுடன் 'இட்லி கடை' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் ''இட்லி கடை'' படத்தில் நடித்த அனுபவத்தை நித்யாமேனன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்,
''இட்லி கடை படத்தில் சாணத்தை என் கைகளால் சுத்தம் செய்தேன். முதல் முறையாக அதை செய்தேன். சொல்லப்போனால், தேசிய விருது வாங்க செல்வதற்கு ஒரு நாள் முன்பு, அந்தக் காட்சியை செய்தேன். தேசிய விருதைப் பெறும்போது, என் விரல் நகங்களில் மாட்டு சாணம் இருந்தது. அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது'' என்றார்.