குமுளி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் அருகே சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி மாவேலிகரை. இப்பகுதியில் வசிக்கும் 35 பேர் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சுற்றுலா வந்தனர். இதற்காக கேரள அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை பார்த்து விட்டு நேற்று முன்தினம் மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு தேனி, குமுளி வழியே இன்று (ஜன.6) ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.