இடுகாட்டிற்கு செல்லும் பாதை சீரமைக்காததை கண்டித்து மூதாட்டி உடலை பாலத்தில் வைத்து கிராம மக்கள் திடீர் போராட்டம்

1 week ago 2

*போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கடையம் : கடையம் அருகே இடுகாட்டிற்கு செல்லும் வழியில் கடந்தாண்டு பெய்த மழையில் சேதமடைந்த பாலம் சீரமைக்காததை கண்டித்து மூதாட்டி உடலை பாலத்தில் வைத்து கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பங்களாகுடியிருப்பு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அரசபத்து கால்வாயில் உள்ள பாலம் வழியாக இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் சேதமடைந்தது.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த 2 பேரின் உடலை இடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அந்த சமயத்தில் கால்வாயில் தண்ணீர் சென்றது. ஆனாலும் வேறு வழியின்றி கால்வாயில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி அவரது உடலை உறவினர்கள் மிகவும் சிரமத்துடன் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதனிடையே பாலத்தை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாலத்தை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்ைல. இந்நிலையில் பங்களா குடியிருப்பு கிராமத்தில் சித்திரை வடிவு (88) என்ற மூதாட்டி வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து நேற்று மதியம் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டிற்கு எடுத்து சென்ற போது பாலத்தை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாலத்தில் மூதாட்டி உடலை வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இந்த போராட்டம் நடைபெற்றது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் மற்றும் ஆழ்வார்குறிச்சி வருவாய் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இடுகாட்டிற்கு பாலம் மற்றும் சாலை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் பாலத்தில் இருந்து 6 அடி கீழுள்ள கால்வாயில் இறங்கி மிகவும் சிரமத்துடன் மூதாட்டியின் உடலை ெகாண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த 7 மாதங்களாக இப்பாலம் மற்றும் சாலை சேதமடைந்து கிடக்கிறது இதனால் சுடுகாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். ஒரு சில நேரங்களில் இந்த இடத்தில் வயதானவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த ஆற்றுப்பாலம் மற்றும் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

முதியவர் மயக்கம்

மூதாட்டி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பண்டாரம் என்ற முதியவர் வந்திருந்தார். அவர் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடந்தாண்டு பெய்த மழையால் சேதமடைந்த சாலையில் முதியவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தவறி விழுந்ததில் மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு அங்கிருந்தவர்கள் தண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post இடுகாட்டிற்கு செல்லும் பாதை சீரமைக்காததை கண்டித்து மூதாட்டி உடலை பாலத்தில் வைத்து கிராம மக்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article