சென்னை: இட ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தன்னாட்சி உரிமை, மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் குழு, 1971ம் ஆண்டு முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.