இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்றம் கண்ட பாகிஸ்தான்

2 months ago 12

துபாய்,

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்கா (47.62 சதவீதம்) 4வது இடத்திலும், நியூசிலாந்து (44.44 சதவீதம்) 5வது இடத்திலும், இங்கிலாந்து (40.79 சதவீதம்) சில புள்ளிகளை இழந்து 6வது இடத்திலும் உள்ளன.

இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 7-வது (33.33 சதவீதம்), இடத்திற்கு வந்துள்ளது. 8 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (30.56 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

Noman Ali, Sajid Khan share 19 wickets between them in the third Test to power Pakistan to an unforgettable series win against England #WTC25 | #PAKvENG https://t.co/esU1zkorg9

— ICC (@ICC) October 26, 2024
Read Entire Article