இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா ? கம்பீர் விளக்கம்

1 day ago 4

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் 5 போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பும்ரா 5 டெஸ்ட் போட்டியில் எந்த 3 போட்டியில் விளையாடுவார் என்பது முடிவு செய்யப்படவில்லை.எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து பும்ராவுடன் கலந்துபேசி முடிவு. பும்ரா தரமான பந்து வீச்சாளர்தான்.  அவரை போல தரமான பந்து வீச்சாளர்கள் போதுமான அளவு உள்ளனர். என தெரிவித்துள்ளனர் .

Read Entire Article