இங்கிலாந்து: வீடு வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பலி; 6 பேர் காயம்

3 months ago 20

பென்வெல்,

இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகருக்குட்பட்ட பென்வெல் பகுதியில் வயலட் குளோஸ் என்ற இடத்தில் வீடு ஒன்று நேற்று காலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட வெடிசத்தம் அந்த பக்கத்தில் வசிப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்து நார்தம்பிரியா போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் சம்பவ பகுதிக்கு சென்றனர். வீடு வெடித்ததும் ஏற்பட்ட தீயை அதிகாரிகள் போராடி அணைத்து விட்டனர். எனினும், இந்த சம்பவத்தில், அந்த வீடு முற்றிலும் சேதமடைந்தது. அதன் மேற்கூரைகள் இருபுறமும் இடிந்து விழுந்தன.

இதன்பின்னர், வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா? என தேடும் பணி நடந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களில் குழந்தை உள்ளிட்ட 6 பேர் அடங்குவர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் குணமடைந்து வருகின்றனர். மற்றவர்கள், சம்பவ பகுதிக்கு அருகேயுள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வீடு வெடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எந்த விவரமும் தெரிய வரவில்லை. எனினும், 6 பிளாட்டுகளுக்கு பலத்த பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Read Entire Article