இங்கி வீரர் 123 ரன் எடுத்து அதிரடி: ஹேரி புரூக் பேக் டு பேக் சதம்; நியூசி 5 விக் இழந்து பரிதாபம்

1 month ago 5

வெலிங்டன்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற நியூசி. பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன் எடுத்தது.

முதல் டெஸ்டில் 171 ரன் விளாசிய இங்கிலாந்து வீரர் ஹேரி புரூக் நேற்றைய போட்டியிலும் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். அவர் 115 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 123 ரன் குவித்தார். பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசி அணி, 5 விக்கெட் இழப்புக்கு 86 ரன் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. வில் ஓரூர்க்கி 0, டாம் பண்டெல் 7 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

The post இங்கி வீரர் 123 ரன் எடுத்து அதிரடி: ஹேரி புரூக் பேக் டு பேக் சதம்; நியூசி 5 விக் இழந்து பரிதாபம் appeared first on Dinakaran.

Read Entire Article