ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய 'ஏ' அணி அறிவிப்பு

3 months ago 15

மும்பை,

ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடும் பார்டர் -கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக அங்கு விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக இந்தியா 'ஏ' அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. அதுபோக பெர்த் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்தியா 'ஏ' அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா 'ஏ' அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்திய ஏ அணி:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், (கீப்பர்), அபிஷேக் போரல் (கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், டானுஷ் கோட்டியான்.

Read Entire Article