ஆஸ்திரேலியா இல்லை.. ஐ.சி.சி. தொடர்களில் அதுதான் மிகவும் ஆபத்தான அணி - டிம் சவுதி கருத்து

1 week ago 5

வெலிங்டன்,

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா மிகவும் ஆபத்தான அணி என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஐ.சி.சி. தொடர்கள் என்று வரும்போது இந்தியா வலுவான அணி. அவர்கள் எப்போதும் நாக் அவுட் சுற்றை நெருங்கி விடுவார்கள். எனவே அவர்கள் தொடர் முழுவதுமே ஆபத்தான அணியாக இருப்பார்கள். அதே போல நியூசிலாந்து அணியும் இருக்கும் என்று நம்புகிறேன். 8 அணிகள் பங்கேற்கும் இது மிகவும் சிறந்த தொடர். நானும் அதில் எனது கெரியரில் மகிழ்ச்சியுடன் விளையாடினேன்.

எனவே நியூசிலாந்து இத்தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை சேர்க்கும் என்று நம்புகிறேன். உலகத்தொடர்களில் அணியாக முக்கிய நேரத்தில் சிறப்பாக விளையாடும் திறன் எங்களிடம் இருக்கிறது. ஒன்றாக விளையாடுவது என்பது நாங்கள் அனைவரும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட ஒரு திறமையாகும்" என்று கூறினார்.

Read Entire Article