ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஸ்பென்சர் ஜான்சன்

2 hours ago 2

சிட்னி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 32 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட்டுகளும், அபாஸ் அப்ரிடி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. 19.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக உஸ்மான் கான் 52 ரன்கள் அடித்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக அபாரமாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜேம்ஸ் பால்க்னர் மட்டுமே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

Read Entire Article