ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஜானிக் சினெர் 2-வது சுற்றுக்கு தகுதி

7 hours ago 2

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' ஆன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜானிக் சினெர் (இத்தாலி), தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சினெர் 7-6, 7-6 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 2-வது சுற்று ஆட்டத்தில் டிரிஸ்டன் ஸ்கூல்கேட் உடன் மோத உள்ளார்.

Read Entire Article