நாளை மறுநாள் நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

18 hours ago 3

புதுடெல்லி,

தேசிய தேர்வு முகமை நடத்தும் 'யுஜிசி - நெட்' தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் நாளை மறுநாள் மற்றும் 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை நாட்களில் நெட் தேர்வை நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் தேதிகளை மாற்றக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article