ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்

3 hours ago 2

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் - சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.

இந்த போட்டியில் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப், அடுத்த இரு செட்களை 6-2, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக 5-7, 6-2, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் வரும் 21ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் - ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோத உள்ளார். 

Read Entire Article