ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

2 weeks ago 4

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையாக இகா ஸ்வியாடெக் (போலந்து) - ஜெர்மனியின் ஈவா லைஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஈவா லைஸை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். வரும் 22ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோத உள்ளார்.

Read Entire Article