ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மேடிசன் கீஸ்

3 hours ago 1

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) - உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இந்த போட்டியின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த மேடிசன் கீச், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களில் அபாரமாக விளையாடினார். இதன் மூலம் 2வது மற்றும் 3வது செட்டை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் கைப்பற்றினார்.

இதன் மூலம் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்திய மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். 

Read Entire Article