ஆஸி. பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள அந்தோணி அல்பனீசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

3 weeks ago 7

டெல்லி,

ஆஸ்திரேலியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 150 தொகுதிகளில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.

தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது. தேர்தலில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், ஆளும் தொழிலாளர் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியாவின் பிரதமராக தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமராக 2வது முறையாக தேர்வாகியுள்ள அந்தோணி அல்பனீசுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்திரேலிய பிரதரமராக மீண்டும் தேர்வாகியுள்ள அந்தோணி அல்பனீசுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி ஆஸ்திரேலிய மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இந்தோ-பசுபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சியை கொண்டு செல்ல இந்தியா- ஆஸ்திரேலியா நட்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

Read Entire Article