ஆவடியில் பரபரப்பு ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபருக்கு வலை

1 week ago 2

ஆவடி, பிப். 15: ஆவடியில் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி எச்.வி.எப் சாலையில் அமைந்துள்ள ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எச்.வி.எப் மற்றும் இன்ஜின் தொழிற்சாலையில் தலைமை அலுவலகமான ஆர்ம்ர்ட் வெஹிகிள்ஸ் நிகம் லிமிடெட் (அவனி) அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று காலை 7.44 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. சர்வர் பிரச்னையால் இந்த மின்னஞ்சலை மதியம் 2.30 மணிக்குத்தான் பார்த்துள்ளனர்.

அந்த மின்னஞ்சலில் 2.55 மணிக்கு பாம் வெடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 134 பணியாளர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறி அலறியடித்துக்கொண்டு சாலையில் ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பநாய் ஜான்சி மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து அலுவலகம் முழுவதும் சோதனை செய்தபோது வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்தனர். மேலும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இமெயில் அனுப்பிய நபர் யார்? எதற்காக இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆவடியில் பரபரப்பு ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article