சென்னை: சென்னை,ஆவடி, தாம்பரம் ஆணையரகங்கள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து மாவட்டம் மற்றும் மாநகரங்களில் ‘சமூக ஊடக மையம்’ உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகரங்களை தவிர மற்ற ஒவ்வொரு மாவட்டம், மாநகரிலும் போதிய இட வசதி மற்றும் உரிய கட்டமைப்புகளுடன் தேவையான பணியாளர்களுடன் பிரத்யே ‘சமூக ஊடக மையம்’ உருவாக்கப்படும். திரைமறைவு இணையதளம் வழியாக நிகழ்த்தப்படும் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக திரைமறைவு இணையதள கண்காணிப்பு அமைப்பிற்கான சிறப்பு பிரிவு ஒன்று ரூ.2.10 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த திட்டம் 3 வருடங்களில் செயல்படுத்தப்படும். இதற்கென வருடத்திற்கு ரூ.70 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆவடி, தாம்பரம் தவிர்த்து அனைத்து மாநகரங்களில் சமூக ஊடக மையம் உருவாக்கம் appeared first on Dinakaran.