ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாக வாய்ப்பு: டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

2 hours ago 2

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்​பெறக்​கூடும் என தெரி​வித்​துள்ள வானிலை மையம் கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்​களுக்கு அதிக​னமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை​யும் விடுத்​துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​ மண்​டலத் தலைவர் எஸ்.பாலச்​சந்​திரன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்றுள்​ளது. இது, தென்​மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில் இலங்கை – திரி​கோணமலை​யி​லிருந்து தென்​கிழக்கே சுமார் 310 கிமீ தொலை​விலும், நாகப்​பட்​டினத்​திலிருந்து தெற்கு தென்​கிழக்கே 590 கிமீ தொலை​விலும், புதுச்​சேரியி​லிருந்து தெற்கு தென்​கிழக்கே 710 கிமீ தொலை​விலும், சென்னையி​லிருந்து தெற்கு தென்​கிழக்கே 800 கிமீ தொலை​விலும் நிலை​கொண்​டுள்​ளது. நல்ல மேக கூட்​டங்கள் உருவாகி​யுள்​ளது.

Read Entire Article