ஆழித்தேர் அலங்காரம்; நாட்டு நலப்பணிகள் திட்ட முகாமில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

2 weeks ago 4

வலங்கைமான் ஏப். 3 வலங்கைமான் அடுத்த ஆதிச்ச மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நாட்டு நலத்திட்ட முகாமில் தொழுவூர் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். வலங்கைமான் அடுத்த தொழுவூர் அரசினர் பல்வகை தொழில் நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பு முகாம் ஆதிச்சமங்களம் ஊராட்சியில் கடந்த 25 ஆம் தேதி முதல் 7 நாட்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு வலங்கைமான் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார்.

முதல்வரின் நேர்முக உதவியாளர் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், ஊழியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள். முன்னால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வைரவேல், ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, சமூக ஆர்வளர் ஜெய இளங்கோ, யோகா மாஸ்டர் இளையராஜா மற்றும் முன்னால் ராணுவ வீரர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கதுரை சீத்தாராமன் ஆகிய இருவரும் வழி நடத்தினர். நாட்டு நல பணித்திட்ட முகாமின்போது ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் ஆயிரம் ஆண்டு பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோயிலை ஆக்கிரமித்து இருந்த செடிகள் அகற்றி உழவாரப் பணியினை மேற்கொண்டனர். நாட்டு நலத்திட்ட பணிகள் முகாமில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

The post ஆழித்தேர் அலங்காரம்; நாட்டு நலப்பணிகள் திட்ட முகாமில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article