ஆள் பாதி ஆடை மீதி

2 weeks ago 6

இந்தப் பழமொழி சும்மாவா சொன்னார்கள். நம் தோற்றத்தை மெருகேற்றிக் காட்டுவதில் முக்கியப் பங்கு ஆடைகளுக்குத்தான். தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்துக் கொண்டால் எந்தப் பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.உயரம் குறைவாக, சிவப்பான பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக் கூடாது. அதையும் மீறி அணியும் போது அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ஜாக்கெட்டை காண்ட்ராஸ்டாகவோ (அ) வேலைப்பாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.டஸ்கி நிறம், உயரம் குறைவாக இருப்பவர்கள் மெல்லிய சரிகைப் பார்டர் வைத்தோ (அ) மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்த வரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளைத் தவிர்ப்பது நல்லது. மிகவும் டார்க் நிற ஆடைகளை கரும் நிறம் கொண்டவர்கள் அணியக் கூடாது. ஆனால் கருப்பு நிறம் எல்லா சரும நிறத்துக்கும் சரியாகப் பொருந்தும். மற்ற அடர் நிறங்களைத்தான் கூடுமானவரை தவிர்க்கவும். அப்படியே அணிந்தாலும் அதில் சிறிய வெளிர் நிறப் பூக்களோ (அ) புள்ளிகளோ இருக்கும் படியான ஆடைகளைத் தேர்வு செய்து அணியலாம். இவர்கள் ஒற்றை, ஒற்றையாகத் தனித்தனி டிசைன்களும், அதில் டிசைன்களுக்கு நடுவே நிறைய இடை வெளியும் இல்லாமல் இருப்பது போன்ற புடவைகளைத் தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.ஒல்லியாகவும், உயரமாகவும் நிறமாகவும் இருக்கும் பெண்கள் கோடு (அ) கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய் விட வேண்டும். முடியை கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய பார்டர் (அ) நீளவாக்கில் அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலைச் செய்த சுடிதார் அணியக் கூடாது. கொஞ்சம் பெரியப் பூக்கள் போட்ட பளிச் சென்று மீன்னும் சேலைகள் (அ) சுடிதாரும் பாட்டமும் பூப் போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான ப்ளெயின் துப்பட்டாவை பொருத்தமானக் கலரில் (அ) வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் ராணி நீங்கள்தான். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாகத் தெரிவீர்கள்.

ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள டஸ்கி (அ) மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான ஆடைகளைத் தேர்வு செய்யக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும் டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவது போல் ஆடையைத் தேர்வு செய்யலாம். இப்படி ஆடையைத் தேர்வு செய்யும் போது அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு எந்த வொரு ஆடையும் அணியக்கூடாது. ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும் பாட்டமும் வெவ்வேறுக் கலரில் இருப்பது போல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மிடியில் கூட முன் பக்கம் பட்டையாகத் தைத்து. அதில் அடி நுனிவரை பூ வேலைப்பாடுகள் (அ) மணி, சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தைச்சற்று உயர்த்திக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். மேலும் நீங்கள் ப்ரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகக் காட்டும். இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து விட வேண்டும். சரியான் அளவில் கச்சிதமான உடைகளை உடுத்தலாம்.பேண்ட், டீஷர்ட் அணியும் பெண்கள் டீ- சர்ட் எனில் பென்சில் டிப் ஜீன்களை பயன்படுத்தும் போது கொஞ்சம் பப்ளி பெண்கள் ஒன்றுக்கு இரண்டு முறை பின்புறம் எப்படி இருக்கிறது, நமக்கு இந்த பேண்ட் பொருந்துகிறதா என சரிபார்த்து வாங்குவது அவசியம். இல்லையேல் பின்பக்க அழகை மூடியபடி அணியலாம். காரணம் இப்படியான உடலை ஒட்டிய பென்சில் டிப் ஜீன்கள் முழுமையான உடல் பருமனைக் காட்டும்.

The post ஆள் பாதி ஆடை மீதி appeared first on Dinakaran.

Read Entire Article