ஆளுநர் மாளிகை முன்பு மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் காயம்

1 month ago 3

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை கவர்னர் மாளிகை முன்பு பாதுகாப்பு பிரிவு காவலர்கள் மற்றும் பரங்கிமலை ஆயுதப்படை காவலர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 நாட்களாக பெங்கல் புயல் காரணமாக காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நேற்று திடீரென சுழல் காற்று வீசியது. அப்போது ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து பெண் ஆயுதப்படை காவலர் நந்தினி, முறிந்து விழுந்த மரத்தின் இடையே சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post ஆளுநர் மாளிகை முன்பு மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article