ஆளுநர் மாற்றம் விவகாரத்தில் பதிலளிக்க விரும்பவில்லை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

3 weeks ago 3

மீனம்பாக்கம்: ஆளுநர் மாற்றம் குறித்து நாளேடுகளில் வரும் தகவல்கள் அனைத்தும் யூகங்கள்தான். அதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்று சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படும் முன்பு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

என்னை ஆர்எஸ்எஸ் ஆதரவாளன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நான் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு ஏன் வழங்க வேண்டும் என்பதற்கான தகவலை கொடுத்தவன் நான். அம்மக்களுக்கு எளிதாக இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இட ஒதுக்கீடு. அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு, சென்று சேர வேண்டும் என்பதே எங்களின் கொள்கை.

கடைநிலை மக்களுக்கும் அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே அந்தியோதயாவின் பொருள். கடந்த கால தேர்தல் வரலாற்றில், அருந்தியர் மக்களுக்கு விசிக சார்பில் போட்டியிட திருமாவளவன் வாய்ப்பு கொடுத்திருந்தாரா? நாங்கள் சனாதனத்தையும் ஆன்மீகத்தையும் ஆதரிப்போம். ஆளுநர் மாற்றம் குறித்து நாளேடுகளில் வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் யூகங்கள்தான். இதுபோன்ற யூகங்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆளுநர் மாற்றம் விவகாரத்தில் பதிலளிக்க விரும்பவில்லை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article