ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

3 hours ago 2

புதுடெல்லி: தமிழ்நாடு அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது. பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலமும் வரும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது.

இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ளது. ஆனால் ஏற்கனவே செய்தது போலவே பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இது விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய விதமான கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article