ஆளுநரை வைத்து போட்டி அரசை நடத்த முயற்சிப்பதா?: ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

3 weeks ago 3

ஈரோடு: ஆளுநரை வைத்து தமிழகத்தில் போட்டி அரசை நடத்த முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிய கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி பாட வைத்த செயல், தமிழ்நாட்டிற்கு விரோதமாக, ஒன்றிய அரசின் தூண்டுதலின்பேரில் செய்த செயலாகும். அவர்களது பின் புலத்தின் தைரியத்தினால் தான் அவர் இவ்வாறு செயல்படுகிறார். தனிப்பட்ட முறையில் அவர் செயல்பட வாய்ப்பில்லை.

பதவிக்காலம் முடிந்தும் ஆளுநரை மாற்றாமல் உள்ளனர். ஏனெனில் அவர் மோடி அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றுவது, போட்டி அரசை ஆளுநரை வைத்து நடத்துதல் போன்ற திட்டங்களை செயல்படுத்த நினைக்கின்றனர். அது வெற்றி பெறாது. ஆளுநரை இவ்வாறு பயன்படுத்த பாஜவின் செல்வாக்கு சரியுமே தவிர அதனால் எந்தவித அரசியல் பலனும் அவர்களுக்கு கிடைக்காது.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து எதிர்த்து அவர்களது சதிகளை எதிர்ப்போம். சீமான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால்தானே செய்வார். எப்போது வருவார் என யாருக்கும் தெரியாது.

The post ஆளுநரை வைத்து போட்டி அரசை நடத்த முயற்சிப்பதா?: ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article