ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்; உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன் பேட்டி

3 months ago 15

சென்னை: ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். துணைவேந்தருக்குக்கான தேடுதல் குழுவில், பல்கலை. மானியக் குழு உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை ஏற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கோவி.செழியன் அளித்த பேட்டியில்:
தமிழக ஆளுநருடைய முரண்பாடான கருத்து என்பது தமிழக அரசு எப்போதும் சரியான பாதை, சட்டவிதிகளுக்குட்பட்டு தான் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தி அதன்படி தான் செய்திருப்போம் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. இந்நிலையில், ஒருசில முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையையும், ஊடகத்திலும், நேரிலும் பார்த்த செய்திகள் உணர்த்துகிறது.

முரண்பாடு மோதல் என்பதையெல்லாம் தேவையில்லை என்ற நிலையிலும், முறையான நெறிமுறைப்படி மாணவர்கள் நலன்காக்க எவை, எவைகளை மேற்கொள்ள வேண்டுமோ அவைகளை முறையாக செயல்படுத்த வேண்டும் எனபது முதலமைச்சர் எனக்கு வலியுறுத்தியுள்ளார். எனவே நமது மாநில உரிமை, தமிழக அரசின் கல்வி நிலை, உயர்கல்வியின் கொள்கைநிலை, இவைகளையெள்ளாம் நிலைநிறுத்திதான் செயல்பாடுகள் அமையும். எனவே முட்டல்,மோதல் என்பது தமிழக அரசு உருவாக்கிகொள்வதில்லை. என்றைக்கும் நட்புணர்வோடு தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சரும், உயர்கல்வித்துறையும் உறுதுணையாக இருக்கும்.

துணைவேந்தருக்குக்கான தேடுதல் குழுவில், பல்கலை. மானியக் குழு உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு, துணைவேந்தர் நியமனத்தில் முரண்பாடு களையப்பட்டு விரைவில் துணைவேர்ந்தர்களும் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் கூறினார்.

The post ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்; உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article