ஆளுநருக்கு எதிரான வழக்கில் துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தையும் சேர்த்து உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

2 hours ago 1

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் தடையாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தையும் சேர்த்து உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி அனைத்து விஷயங்களிலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று கடந்த வாரம் ஒரு புதிய ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தையும் கடந்த 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கிறோம்.

அதற்குள் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தரப்பில் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை காண வேண்டும். இல்லையெனில் வழக்கை நாங்களே விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம்” என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தையும் சேர்த்து உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆளுநருக்கு எதிரான வழக்கில் துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தையும் சேர்த்து உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article