டெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200ன்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய வேண்டும். மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும்தான் ஆளுநர் செயல்பட முடியுமா அல்லது சுயேச்சையாக முடிவுசெய்ய அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200ன்படி சுயேச்சையாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியுமா?. 2-வது முறை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டப்படி தவறா என முடிவுசெய்ய வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். மசோதாக்களை தான் நிறுத்தி வைக்காமல் ஜனாதிபதி முடிவு செய்ய ஆளுநர் அனுப்ப முடியுமா? என்பதையும் முடிவு செய்ய வேண்டும். கூடிய விரைவில் என்ற வாக்கியத்துக்கு என்ன பொருள்?. ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது.
புரிந்துணர்வோடு நியாயமான முடிவை ஆளுநர் எடுப்பார் என்ற எண்ணத்துடன்தான் அரசியல் சட்டத்தை நிர்ணயித்தவர்கள் விதி வகுத்தனர். ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை.மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். வெறுமனே மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூற முடியாது. சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியாது என தெரிவித்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட தீர்ப்பு பின்வருமாறு;
1.ஆளுநர் ஒருமுறை மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டால் அதன் தொடர் நடவடிக்கையை அவர்தான் மேற்கொள்ள வேண்டும்.
2.10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்.
3.10 மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.
4.2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்
5.ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கை ரத்து.
6.ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது.
7.ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.
8.2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.
9.மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு ஒருமாதம் காலக்கெடு.
10.சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதத்துக்குள்ளும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பு வழங்கினர்.
The post ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை; 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.