'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

1 week ago 6

சென்னை,

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 'பிரேமலு'. இந்த படத்தில் நஸ்லென் கதாநாயகனாக நடித்திருந்தார். கதாநாயகியாக மமீதா பைஜு நடித்திருந்தார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் நஸ்லென் தனது இரண்டாவது படமான 'ஆலப்புழா ஜிம்கானா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனக்ஹா ரவி , கோட்டயம் நஸீர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக இருக்கிறது. மம்முட்டியின் ‛உண்ட' மற்றும் டொவினோ தாமஸின் ‛தள்ளுமால' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கல்லூரியில் சேர விரும்பும் இளைஞர்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆலப்புழா ஜிம்கானா படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Read Entire Article