
சென்னை,
இயக்குனர் சிவா.ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, 'அருவி' மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார்.
காதல் கதை களத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் சிவா.ஆர் தயாரித்திருக்கிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன், கேபிள் சங்கர் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல் மற்றும் ஒரு அழுத்தமான காதல் களம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 'ஆலன்' படத்தின் டிரெய்லரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது ஆலன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 18-ந் தேதி வெளியாக உள்ளது.