ஆலத்தூர்கேட் – செட்டிகுளம் இடையே சாலையில் பரபரப்பான சாலையில் வாகன விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடை

1 month ago 5

 

பாடாலூர், அக்.15: ஆலத்தூர்கேட் – செட்டிகுளம் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில்களுக்கு ஆலத்தூர்கேட்- செட்டிகுளம் சாலைகளில் தான் செல்ல வேண்டும். இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் இருபுறமும் புளியமரங்கள் உள்ளது.

ஆலத்தூர்கேட்- செட்டிகுளம் செல்லும் சாலையில் ஆலத்தூர்கேட் முதல் நாட்டார்மங்கலம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி கிடையாது. இதனால் மலைகளால் சூழப்பட்ட இப்பகுதி இரவில் கும்மிருட்டாக காணப்படும். ஆலத்தூர் கேட்டில் இருந்து வரும்போது மல்ல பிள்ளையார் கோயில் அருகே ஒரு வேகத்தடை, நாட்டார்மங்கலம் மன்னார் ஈஸ்வரன் கோயில் செல்லும் பிரிவு சாலை அருகே வேகத்தடை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதில் மல்ல பிள்ளையார் கோயில் அருகே உள்ள வேகத்தடை திருப்பத்தை தாண்டி போடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த சாலையில் செல்வோர் வேகத்தடைகள் இருப்பதை அறிந்து உஷாராக செல்கின்றனர்.

ஆனால் புதிதாக வருபவர்கள் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இருட்டில் வேகத்தடை இருப்பது தெரியாமல், சிலர் அதன் மீது வாகனத்தை ஏற்றி தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். போதையில் வரும் குடிமகன்களின் நிலை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இப்போது மழைக்காலம் என்பதால், அதிகளவில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வேகத்தடை என்பது விபத்தை தடுப்பதற்காக இருக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்துவதற்காக இருக்க கூடாது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேகத்தடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வேகத்தடை இருக்கும் இட ங்களில் சோலார் மின் விள க்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

The post ஆலத்தூர்கேட் – செட்டிகுளம் இடையே சாலையில் பரபரப்பான சாலையில் வாகன விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடை appeared first on Dinakaran.

Read Entire Article