திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் ஆற்று திருவிழாவில் வீசப்பட்ட குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் 5ம் தேதி ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவையொட்டி வீரபாண்டி, வேட்டவலம், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
அதன்படி, இந்தாண்டு திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொங்கல் பண்டிகை ஒட்டி விடுமுறைக்கு வந்த அனைவரும் இந்த ஆற்று திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தென்பெண்ணை ஆற்றில் வணிகர்கள் கரும்பு, பொரி, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட கடைகள் வைத்து அங்கு வியாபாரம் செய்வது வழக்கம்.
அதன் காரணத்தால் தென்பெண்ணையாற்றில் குப்பைகள் சேரும். இதனை ஒவ்வொரு வருடமும் நகராட்சி ஊழியர்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றி வருவது வழக்கம். அதன் பேரில் இந்த வருடம் நடைபெற்ற ஆற்று திருவிழாவில் தென்பெண்ணையாற்றில் குப்பை அதிகமாக காணப்பட்டதால் நகராட்சி ஆணையர் திவ்யா உத்தரவின் பேரில், நேற்று நகராட்சி ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் தென்பெண்ணை ஆற்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
The post ஆற்று திருவிழாவில் வீசப்பட்ட குப்பைகள் தென்பெண்ணை ஆற்றில் தூய்மை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.