ஆற்றில் மூழ்கிய தொழிலாளி மாயம்

2 weeks ago 2

நெல்லை,ஜன.23: நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர். நெல்லை சிந்துப்பூந்துறையை சேர்ந்தவர் வேலு (48) அப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்துவந்தார். இவர் நேற்று மாலை உறவினர்களுடன் சிந்துப்பூந்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது அவர் சிந்துப்பூந்துறையில் இருந்து வண்ணார்ப்பேட்டை படித்துறைக்கு நீந்தி சென்றார். அப்போது அவர் சிறிது தூரம் சென்றதும் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட உறவினர்கள் சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அளித்த தகவலின் பேரில் நெல்லை டவுன் தீயணைப்பு நிலையத்திலிருந்து நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேலுவை தேடினர். ஆனால் வெகுநேரமாகியும் அவர் கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து இரவு நேரமாகி விட்டதால் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை நிறுத்தினர். மீண்டும் இன்று காலையில் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுவர்.

The post ஆற்றில் மூழ்கிய தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article