ஆறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு; பொதுமக்கள் குளிக்க செல்லக்கூடாது

1 week ago 3

திருவாரூர், ஜுன் 23: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து ஆறுகளிலும் நீர் செல்வதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் ஆறுகளுக்கு குளிக்க செல்வதை தவிர்க்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் செல்வதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் நகர்புறம், கிராமபுறப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட அனைவரும் ஆற்று பகுதிகளுக்கு குளிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் நீர் நிலைகளில் சரியான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகளையும், தடுப்புகளையும் வைத்திடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகள் முன்பாக செல்பி எடுப்பது மற்றும் ஆடு, மாடுகளை நீரில் அழைத்து செல்வது கூடாது.

பொதுமக்கள் நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விளக்கி சொல்ல வேண்டும். வனஅலுவலர்கள், காவல்துறையினர் நீர்நிலைகளில் குளிக்கசெல்வோர் அசாதாரன செயல்களில் ஈடுபடுவதை கண்காணித்திடவும், அவ்வாறு ஈடுபடுவதை தவிர்க்கும் படி அறிவுரை வழங்கிடவும் வேண்டும். எதிர்பாராத விதமாக ஏற்படும் அசம்பாவிதங்களின் போது முதல் உதவி அளித்திட தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

The post ஆறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு; பொதுமக்கள் குளிக்க செல்லக்கூடாது appeared first on Dinakaran.

Read Entire Article