ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி

10 hours ago 2


ஆர்லியன்ஸ்,


பிரான்ஸ் நாட்டில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த செவ்வாய் கிழமை தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற 9-ந்தேதி வரை நடைபெறும். இதில், காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்திய வீரர்களான பிரனாய் மற்றும் ஆயுஷ் ஷெட்டி இருவரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். எனினும், கிரண் ஜார்ஜ் போட்டியில் தோல்வி கண்டார்.

இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் தொடக்க சுற்று போட்டி ஒன்றில், சீன தைபேவை சேர்ந்த வாங்கை 21-11, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதேபோன்று மற்றொரு போட்டியில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூவை 21-17, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Read Entire Article