ஆர்ட் & கிராஃப்ட்!

3 weeks ago 4

எக்காலத்திலும் அழியாதவை கைவினைக் கலைகள். காரணம் ஒரு குடிசை முதல் கோபுரங்கள் வரை எங்கேயும் அவரவர் வசதிக்கேற்ப , விருப்பத்திற்கேற்ப வீட்டையும் தன் சுற்றத்தையும் அலங்கரிப்பது வழக்கம். இது மனிதன் நாடோடியாக இருந்த காலத்தில் கூட தனது நகைகள், உடைகளுக்காகத் துவங்கி தன்னை அலங்கரிப்பதற்காக கைவினைப் பொருட்களை செய்யத் துவங்கியவன், இன்று விசேஷங்கள், வீட்டு உட்புறம் என எங்கேயும் எதாவது ஒரு முறையில் அலங்காரம் என்பது இருந்துகொண்டுதான் இருக்கின்றது. மேலும் தன் மனதை ஒருநிலைப்படுத்தி, கைகளால் ஏதேனும் வேலைகள் செய்யும் போது மனமும் , உடலும் அமைதியடைந்து பக்குவம் பெறும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவேதான் கைவினைப் பொருட்கள் இன்றும் விலை மதிப்புள்ளவையாக பார்க்கப்படுகின்றன. எனக்கு எங்கே துவங்குவது, என்னளவில் சில கைவினைப் பொருட்களை எப்படி உருவாக்குவது என யோசிப்போருக்கு, பதில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும். ஆர்ட் & கிராஃப்ட் ஃபார் பிகின்னர்ஸ் (Arts & Crafts for Beginners) என்னும் செயலியைப் பயன்படுத்தலாம். சின்னச் சின்ன எளிமையான கைவினை பொருட்கள் முதல் பலவிதமான செய்முறை பயிற்சிகள் இந்தச் செயலியில் உள்ளன. மேலும் வீடியோக்களும் காணக் கிடைக்கின்றன. இதனை தரவிறக்கம் செய்து வரவிருக்கும் பூஜை காலங்களில் வீட்டையும், பூஜை அறைகளையும் அலங்கரியுங்கள்.

The post ஆர்ட் & கிராஃப்ட்! appeared first on Dinakaran.

Read Entire Article