‘ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு பேச்சு’ - தி.க நிர்வாகி மதிவதனி மீது போலீஸில் பாஜக புகார்

5 months ago 29

சென்னை: ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி மீது பாஜக மாநிலச் செயலாளர் அ.அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், “உலகின் மிகப் பெரிய தன்னார்வலர்கள் அமைப்பான ஆர்எஸ்எஸ் பற்றி திராவிட கழக நிர்வாகி மதிவதனி என்பவர் அவதூறாக பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேர்ந்தது. அதில், “பள்ளி கல்லூரிகள் இருக்கும் இடத்தில் போதைப் பொருள் அதிகமாக விற்கப்படுகிறது. இது ஆர்எஸ்எஸ் உடைய வெளிப்படையான திட்டம். ஏன் தன்னுடைய சொந்த மக்களை போதைக்கு அடிமைப்படுத்த சொல்கிறார்கள்? ஏனென்றால் போதைக்கு அடிமையானால் பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்” எனப் பேசியுள்ளார்.

Read Entire Article