ஆர்.ஜே பாலாஜியின் 'சொர்கவாசல்' படத்தின் டீசர் வெளியானது

3 months ago 14

சென்னை,

நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, சலூன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார்.

சொர்கவாசல் எனும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றுமுன்தினம் வெளியானது. இயக்குநர் பா. ரஞ்சித் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் 'சொர்கவாசல்' படத்தின் டீசரை இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

#SorgavaasalTeaser - https://t.co/WlpNyIBQCh Watch out for this guy @sid_vishwanath on his debut film.. an awesome talent here to stay And the new avatar of @RJ_Balaji ⚡️⚡️⚡️All the best to all my loved ones @selvaraghavan anna @sidd_rao #PallaviSinghpic.twitter.com/DI5EmAhTzO

— Anirudh Ravichander (@anirudhofficial) October 21, 2024
Read Entire Article