ஆரோக்கியமான கூந்தலுக்கு ஐஸ் கட்டி!

3 weeks ago 3

*கடலை மாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு, 1 டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ முகம் மிருதுவாகும்.
*ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கையில் தேய்த்துக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாகும்.
*பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களைச் சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
*புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதைத் தொடர்ந்து 1 மாதம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
*நகங்களை வெட்டும் முன் எண்ணெயைத் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.
*கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரை கலந்து தலையில் லேசாக தடவிக் கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
*முகம் மிருதுவாகவும் ேராஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப்பூ இதழ்களை அரைத்து அதோடு பால், பச்சைப் பயறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
*கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்துப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
*தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும். தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
*பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
*வெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலை மாவு மூன்றையும் சம அளவு எடுத்து முகம், கைகால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
*முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சைச் சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடிவளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
– N.குப்பம்மாள்

The post ஆரோக்கியமான கூந்தலுக்கு ஐஸ் கட்டி! appeared first on Dinakaran.

Read Entire Article