ஆரூயிர் நண்பர்கள் எங்கே..? அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

7 hours ago 1

தமிழக சட்டப் பேரவையில் நேற்று அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு அவைக்கு வந்த அதிமுக உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசினார். அவரது இருக்கை அருகே அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். இதை தனது உரையின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டிய பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், என்னோடு கடைசி இருக்கையில் அமர்ந்து எனக்கு ஆலோசனை வழங்குகிற உயர் நண்பர்களுக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்போது, அவரது அருகில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வெளியே சென்று விட்டனர். இதை கவனித்த அவை முன்னவர் துரைமுருகன், ‘ஆரூயிர் நண்பர்கள் என்றீர்கள்? இப்போது உங்கள் நண்பர்கள் எங்கே?’ என்று கேட்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

உடனே சபாநாயகர் அப்பாவு, அவருக்கு( உடுமலை ராதாகிருஷ்ணன்) பாதுகாப்பாக மனோஜ் பாண்டியன், அய்யப்பன் (ஓ.பி.எஸ். ஆதரவு உறுப்பினர்கள்) இருக்கிறார்கள் என்றார். இதை எதிர்பாராத உடுமலை ராதாகிருஷ்ணன் சுதாரித்துக்கொண்டு, ‘எனக்கு பாதுகாப்பாக நீங்கள் (சபாநாயகர்) இருக்கிறீர்களே?’ என்று கூற அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

The post ஆரூயிர் நண்பர்கள் எங்கே..? அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை appeared first on Dinakaran.

Read Entire Article