ராமேஸ்வரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாளை (திங்கள் கிழமை) ராமேஸ்வரம் கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள சபாபதி சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதால் நாளை(ஜன.13) கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணி முதல் 3:30 வரை ஸ்படிகலிங்க பூஜை, பின் திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு சபாபதி சன்னதியில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று 4:15 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்பாடு நடைபெறும்.
காலை 5:15 மணிக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு திருவிழா தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீநடராஜர் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலாவை நடைபெற்று பின் பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் நலுங்கு வைபவத்தை தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
The post ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாளை (திங்கள் கிழமை) ராமேஸ்வரம் கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறப்பு. appeared first on Dinakaran.