ஆரம்பத்தில் விராட் கோலியை பிடிக்காது - டி வில்லியர்ஸ் பகிர்ந்த சுவாரசிய தகவல்

4 hours ago 2

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்சும் சிறந்த நண்பர்களாக போற்றப்படுகின்றனர். ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக நண்பர்களாக மாறிய இவர்கள் தற்போது வரை அந்த நட்பை தொடருகின்றனர்.

விராட் கோலி குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது அவருக்கு ஆதரவாக ஏபி டி வில்லியர்ஸ் பேசியிருக்கிறார். விராட் கோலியும் பேட்டிகளில் ஏபி டி வில்லியர்ஸ் குறித்து சில கருத்துகளை கூறுவார். அந்த அளவுக்கு அவர்களின் நட்பு சிறப்பானது.

இந்நிலையில் ஆரம்பத்தில் தனக்கு விராட் கோலியை பார்த்தால் பிடிக்காது என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ஆனால் நாளடைவில் தாங்கள் எவ்வாறு மிக நெருங்கிய நண்பர்களாகவும் மாறினோம் என்பது குறித்து ஏ.பி.டி வில்லியர்ஸ் சில சுவாரசிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி எனக்கு கிரிக்கெட்டில் சகோதரர் போன்றவர். ஆரம்பத்தில் அவரைப் பார்த்தால் எனக்கு பிடிக்காது. ஆனால் அவரது குணத்தை பற்றி தெரிந்து கொண்டதும் அவரை மிகவும் பிடித்து விட்டது. அதிலும் குறிப்பாக நான் அவருக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே கடினமான ஒன்றாக இருக்கும். அவர் எதிரணியில் விளையாடும்போது நம்மை நண்பராக பார்க்க மாட்டார் கடுமையான போட்டியாளராகவே நினைப்பார்.

ஆனால் ஐ.பி.எல். தொடரில் நாங்கள் ஒன்றாக இணைந்து விளையாட ஆரம்பித்த பின்னர்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். அவரை இன்னும் நன்றாக அறிந்துகொண்டேன். நாங்கள் குடும்ப நண்பர்களாகிவிட்டோம், சகோதரர்களாகிவிட்டோம். நாளடைவில் எங்களுக்குள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்து ஒன்றாக இணைந்து பல்வேறு சிறப்பான போட்டிகளில் விளையாடவே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்.

அவருடன் விளையாடிய ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்திருக்கிறேன். அவருடன் விளையாடிய காலங்களை என்னால் மறக்க முடியாது. நாங்கள் இருவருமே அனைத்து போட்டியிலும் வெற்றி பெறுவதில் மட்டுமே உறுதியாக இருந்தோம். எங்களுடைய அணிக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்கினோம்" என்று கூறினார். 

Read Entire Article