ஜெய்சால்மர்: ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் மீதான வரியை குறைப்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைப்பது பற்றி விவாதிக்கப்படும்.
அனைத்து தனிநபர் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாகக் குறைத்தல், மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் விலக்கு நீட்டிக்கப்படுதல் போன்ற முடிவுகள் எடுக்கப்படலாம். ஸ்விக்கி, ஸூமாட்டோ போன்ற உணவு டெலிவரி தளங்கள் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இவற்றிற்கு வரி விதிப்பு 18 சதவீதமாக உள்ளது. இது 5 சதவீதமாகக் குறைக்கப்படலாம். மின்சார வாகனங்கள் உள்பட அனைத்து கார்களுக்கான விற்பனை கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த உயர்வு பழைய மற்றும் பழைய சிறிய கார்கள் மற்றும் மின்சார வாகனங்களை பழைய பெரிய வாகனங்களுக்கு இணையாக கொண்டு வரும் என அரசு கருதுகிறது. மேலும், அழகுசாதனப் பொருட்கள், கடிகாரங்கள், காலணிகள், ஹேண்ட்பேக் போன்ற லைப்ஸ்டைல் பொருட்களின் விலை அடிப்படையில் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை உயர்த்தும் யோசனையை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விமானத்திற்கான எரிபொருளை(ஏடிஎப்)ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
The post ஆயுள்,மருத்துவ காப்பீடுகள் மீதான வரி குறைக்கப்படுமா? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று முடிவு appeared first on Dinakaran.