சென்னை,
தாம்பரம்-தஞ்சாவூர் இடையே நாளை (அக்டோபர் 11ம் தேதி) வெள்ளிக்கிழமை வார இறுதி விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆயுதபூஜையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தஞ்சாவூர்-தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, தஞ்சாவூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.