ஆயுத பூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு மலை ரயில் 4 நாட்கள் இயக்கம்

3 months ago 17

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் 2வது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ வசதியாக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

இதன்படி வரும் 12, 13ம் தேதிகள் மற்றும் நவம்பர் 2, 3ம் தேதிகளில் குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இரு சேவைகளிலும் முதல் வகுப்பில் 80 இருக்கைகளுடனும், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும். சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

The post ஆயுத பூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு மலை ரயில் 4 நாட்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article