ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களில் 3 பெண்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனு: போலீஸ் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

4 months ago 19

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாகேந்திரன், அஸ்வத்தாமன், அருள், பொன்னை பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன் தரப்பில், மருத்துவ காரணங்களுக்காக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பொற்கொடி, அஞ்சலை, மலர்கொடி ஆகியோர் தரப்பில் மனு செய்யப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிபதி, மனுக்களுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையில் இருந்து நாகேந்திரன் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதியளித்து வழக்கின் விசாரணையை ஜனவரி 4ம் தேதி தள்ளிவைத்தார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களில் 3 பெண்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனு: போலீஸ் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article